சாமி வந்தவரிடம் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்: வீடியோ வைரல்

கோவிலில் சாமி வந்தவரிடம் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட சம்பவம் சிரிப்பை உண்டாக்கியுள்ளது.

சாமி வந்தவரிடம் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்: வீடியோ வைரல்

கோவிலில் சாமி வந்தவரிடம் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட சம்பவம் சிரிப்பை உண்டாக்கியுள்ளது.

நடிகர் அஜித் - இயக்குனர் வினோத் கூட்டணியில் உருவாகி வரும் வலிமை படம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் அப்டேட் கொடுப்பதில்லை என அஜித் ரசிகர்கள் கோபத்தில் இருப்பது அனைவரும் அறிந்ததே. அப்டேட்டுக்காக வெறித்தனமாக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள், மோடி, எடப்பாடி தொடங்கி இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலியிடம் கூட அப்டேட் கேட்டு அதிர்ச்சி கொடுத்தனர்.

அஜித் தரப்பில் அறிக்கையே விட்ட நிலையிலும் அடங்காத அஜித் ரசிகர்கள், சாமி வந்த ஒருவரிடம் வலிமை அப்டேட் கேட்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CQ8qV2RhJbF/?