
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை அட்லி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜா- ராணி, பிகில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் அட்லி. தற்போது, ஷாருக்கான் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார்.
இந்த திரைப்படத்தை முடித்த பின், நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது.
புஷ்பா படத்துக்கு பிறகு பான் இந்தியா ஸ்டாராக உருவெடுத்துள்ள அல்லு அர்ஜுன், அட்லியுடன் இணைய இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.