சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்த பதிவை நீக்கிய அல்போன்ஸ் புத்திரன்!

மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் திரையரங்குகளுக்கான சினிமா இயக்குவதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

நேரம், பிரேமம் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமக்கு ஆட்டிஸம் நோய் இருப்பதைத் தாமே கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

இதனால்  திரையரங்குகளுக்கான சினிமா இயக்குவதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலக விரும்பவில்லை என்று தெரிவித்த அவர், ஓடிடி தளங்களுக்காக படங்கள் இயக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். விளம்பர இடைவேளையைப் போல எதிர்பார்க்க முடியாத வாழ்க்கை, இந்தத் திருப்புமுனையைக் கொடுத்துள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு பெருமளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அல்போன்ஸ் புத்திரன் தந்து பதிவை நீக்கிவிட்டார். ஆனாலும், அவரது பதிவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, தன்னை இணையத்தில் பகிர்ந்து விரைவில், அல்போன்ஸ் புத்திரன் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.