நோஸ்பின் அணிந்து இணையத்தில் வைரலாகும் அமலாபால்!!

வித்தியாசமான தோற்றத்தில் போஸ்ட் போட்ட அமலாபால்....

நோஸ்பின் அணிந்து இணையத்தில் வைரலாகும் அமலாபால்!!

தமிழ் சினிமாவில் மைனா படம் மூலம் அறிமுகமாகிய நடிகை அமலாபால், தன் நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கினார். அதற்கு பிறகு தெய்வ திருமகள், வேட்டை, முப்பொழுதும் உன் கற்பனைகள் என அடுத்தடுத்து படங்கள் நடித்து வந்தார்.

தொடர்ந்து படங்கள் நடித்து வந்த அவர் இப்போது அவ்வளவாக படங்கள் நடிப்பது இல்லை. இதற்கிடையில், இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடனான விவகாரத்திற்கு பிறகு அமலாபால் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

படங்களை குறைத்துக்கொண்ட நடிகை அமலாபால், அவ்வப்போது அதிகம் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அப்படி பார்த்தால் அமலாபால் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தான் முழுநேரமும் ஆக்டிவ்வாக உள்ளார். 

இந்நிலையில், தற்போது வித்தியாசமான லுக்குடன் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், சின்னதான மூக்குத்தி ஸ்டைலாக போட்டு கொண்டு தலைமுடியை கலரிங் செய்து அதனுடன் சேர்த்து நீளமான தலைப்புடன் போஸ்ட் போட்டுள்ளார். அவர் வெளியிட்ட புதிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சூப்பர் என இன்ஸ்டாவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

hE