கோடிகளில் சம்பளம்... நிர்வாணமாக நடித்த ஆண்ட்ரியா... பிசாசு-2 படத்துக்காக எடுத்த ரிஸ்க்!!

மிஷ்கின் இயக்கத்தின் நடித்துவரும் நடிகை ஆண்ட்ரியா இந்த படம் மூலம் தனது சம்பளத்தை கோடிகளில் உயர்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோடிகளில் சம்பளம்... நிர்வாணமாக நடித்த ஆண்ட்ரியா... பிசாசு-2 படத்துக்காக எடுத்த ரிஸ்க்!!

தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அஜித்துடன் மங்காத்தா, கமல்ஹாசனுடன் விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, தரமணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஜய்யின் மாஸ்டர் படத்தில் இவர் நடித்திருந்தார்.

தற்போது ஆண்ட்ரியா மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு- 2 படத்தில் நடித்து வருகிறார். 2016-ல் வெளியான பிசாசு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் வசூல் ரீதியாகவும்  வெற்றிப்பெற்றதால் அடுத்த பாகம் எடுக்க தயாரானார்.

இதனையடுத்து தற்போது பிசாசு-2 வேலைகளில் பிஸியாகிவிட்டார் மிஷ்கின். இதில் ஆண்ட்ரியா ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஒட்டுத்துணி இல்லாமல் நிர்வாணமாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கதைக்கு இந்த காட்சி அவசியம் என்பதால் ஆண்ட்ரியா நடிக்க சம்மதித்துள்ளார். இதுவரை லட்சங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த ஆண்ட்ரியா இந்த படம் மூலம் தனது சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.