”பத்து வருடங்களுக்கு பிறகு அதே சேலையும் நானும்” - கமலுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த ஆண்ட்ரியா!

பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா தனது சமூக வலைதள பக்கத்தில் உலக நாயகன் கமலஹாசனுடன் எடுத்த போட்டோவை பகிர்ந்து, ”10 வருடங்களுக்கு பிறகு அதே சேலையும் நானும்” என்று பதிவிட்டுள்ளார்.

”பத்து வருடங்களுக்கு பிறகு அதே சேலையும் நானும்” - கமலுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த ஆண்ட்ரியா!

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாகவும் நடிகையாகவும் வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. தமிழில் முதல் முதலாக இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர், அடுத்தடுத்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 

அதே சமயம் பல வெற்றி படங்களில் தன் குரலையும் பதிய வைத்தார். அந்த வகையில் இவரின் குரலுக்கு மயங்காத ரசிகர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தன் குரலால் ரசிகர்கள் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்துள்ளார். சமீபத்தில் கூட தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜீன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படத்தில் “ஊ சொல்றியா மாமா” என்ற பாடலை நடிகை ஆண்ட்ரியா பாட, அதற்கு நடிகை சமந்தா நடனம் ஆடியிருந்த நிலையில், இந்தப்பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இதனைத்தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா தற்போது ‘பிசாசு 2’ உள்பட மொத்தம் 8 தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இப்படி படங்களில் பிஸியாக நடித்து வரும் ஆண்ட்ரியா சோஷியல் மீடியா பக்கங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு  ஆக்டிவ்வாக இருந்து வருவார்.

இந்நிலையில் தற்போது நடிகை ஆண்ட்ரியா, ‘விஷ்வரூபம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது உலக நாயகன் கமலஹாசனுடன் தானும், பூஜா ஹெக்டேவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல், அந்த புகைப்படத்தில் ஆண்ட்ரியா கட்டியிருந்த அதே சேலையை தற்போது அணிந்து, 10 வருடங்களுக்கு முன் அணிந்த அதே சேலை மீண்டும்’ என கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கமெண்ட்ஸை குவித்து வருகின்றனர். அதிலும் சிலர் நீங்கள் 10 வருடங்களுக்கு முன் எப்படி இருந்தீர்களோ, அப்படியே இருக்கிறீர்கள், உங்கள் அழகு கொஞ்சம் கூட குறையவில்லை’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.