சிங்கப்பூர் பூங்கா போல் மாறுகிறதா சென்னை பூங்காக்கள்?

சிங்கப்பூர் பூங்கா போல் மாறுகிறதா சென்னை பூங்காக்கள்?

சென்னையில் முக்கியமாக செம்மொழிப் பூங்கா, செங்காந்தள் பூங்கா, மாதவரம் பூங்கா, வண்ணாரப்பேட்டை பூங்கா போன்ற இடங்களை சிங்கப்பூர் மற்றும் மேலை நாடுகளில் உபயோகப்படுத்துகின்ற பூங்காக்களின் தரத்திற்கு இணையாக மேம்படுத்த ஆலோசனை நடைபெற்று வருவருகிறது.

அண்மையில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டு அங்கு இருக்கக்கூடிய சிங்கப்பூர் தேசிய பூங்காவின் முதுநிலை பூங்கா இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வந்தார். அதற்கு அடுத்தபடியாக சிங்கப்பூர் அதிகாரிகள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து முதலமைச்சரை சந்திப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் உத்தரவிற்கு இணங்க சென்னையில் இருக்கக்கூடிய முக்கிய பூங்காக்களை தரம் உயர்த்தவும், மேலை நாடுகளுக்கு இணையாக சென்னை பூங்காக்களை மாற்றவும் தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

செம்மொழிப் பூங்கா மற்றும் அதற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ள தோட்டக்கலைக்குத் துறைக்கு சொந்தமான 1000 ஏக்கர் நிலத்தில் பல்வேறு பூங்காக்களை வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், செம்மொழிப் பூங்காவில் இருந்து நேரடியாக பாதை மூலம் எதிரில் அமைய உள்ள பூங்கா செல்லும் வகையில் வடிவமைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க:மருத்துவ கல்வி தரவரிசை பட்டியல்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியீடு!