அறிமுக நாயகன் இஷான் நடிப்பில் ‘அரியவன்’... ட்ரைலர் வெளியீடு!!!

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அறிமுக நடிகர் இஷான் நடிக்கும் அரியவன் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.  

அறிமுக நாயகன் இஷான் நடிப்பில் ‘அரியவன்’... ட்ரைலர் வெளியீடு!!!

அறிமுக நடிகர் இஷான் நடிக்கும் ‘அரியவன்’ படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது.  இவ்விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.  சிறப்பு விருந்தினராக இயக்குனர் பாக்யராஜ் கலந்து கொண்டார்.

இப்படத்தில் இஷான், ப்ரணாலி நடித்துள்ளனர்.  ஜேம்ஸ் வசந்தன், வேத் சங்கர், கிரி நந்த் ஆகியோர் இசை அமைத்துள்ளனர்.

ஜேம்ஸ் வசந்தன்:

நீண்ட நாட்களுக்கு பிறகு ஹரிஹரன் மற்றும் சித்ரா இணைந்து இப்படத்தில் பாடியுள்ளனர் எனவும் இந்த பாடலை இந்த படத்திற்காக கேட்டதாகவும் கூறியுள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.  மேலும் இயக்குனர் மித்ரன் ஜவஹர் என்று கூறியவுடன் இசையமைக்க ஒத்துக் கொண்டதாகவும் இப்படமும் நல்ல வெற்றிப்படமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

இஷான்:

படத்தின் புதுமுக நாயகன் இஷான் பேசுகையில் இப்படத்தில் நடித்ததற்கு ரொம்ப சந்தோஷமாக உள்ளது எனவும் சமூக கருத்துள்ள படத்தில் நடித்தது கடவுளின் பரிசுதான் எனவும் கூறியுள்ளார்.  மேலும் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடித்தது மகிழ்ச்சி எனவும் இப்படம் முழுக்க முழுக்க குடும்ப என்டர்டெயின்மென்ட் படம் என்றாலும் அதில் சமூக கருத்தும் உள்ளது எனவும் பேசியுள்ளார்.

பாக்யராஜ்:

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாக்யராஜ் பேசுகையில் படத்தின் இயக்குனர் மித்ரன் ஜவஹர் நல்ல இயக்குனர் எனவும் ஹீரோவை சுற்றி நிறைய பெண்கள் நிற்கும்போதே தெரிகிறது இது பெண்கள் விழிப்புணர்வு படம் எனவும் கூறியுள்ளார்.  மேலும் நடிகர் இஷானின் கண்கள் உயிர்ப்புடன் இருக்கிறது‌ எனவும் இப்போது எல்லாம் ஹீரோக்களுக்கு தாடி இருந்தால்தான் மரியாதை என்று ஆகிவிட்டது எனவும் காலம் மாறிவிட்டது எனவும் பேசியுள்ளார்.
 
தொடர்ந்து பேசிய அவர் நான் பார்த்திபன், பாண்டியராஜன் எல்லாம் எதுவுமே கற்றுக் கொள்ளாமல் உள்ளே வந்தவர்கள் எனவும் வந்தபிறகு எல்லாமே கற்றுக் கொண்டோம் எனவும் கூறியுள்ளார்.  மேலும், ஆரம்பத்தில் பல சோதனைகள் வரும் எனவும் அதனை பின்னாளில் நினைத்து பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும் எனவும் கூறிய அவர் கதைக்குள்ளேயே கருத்து இருக்க வேண்டும் எனவும் திணிப்பதாக இருக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:  சென்னையில் வரும் 26 அன்று.... பார்வையற்றோருக்கான கார் பேரணி...!