சென்னையில் 20000 சதுர அடியில் இசை மற்றும் நடன அருங்காட்சியகம்!!

சென்னையில் 20000 சதுர அடியில் இசை மற்றும் நடன அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

சுற்றுலா துறையில் தமிழ்நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டு "தமிழ்நாடு சுற்றுலா கொள்கை - 2023"  தமிழ்நாடு முதலமைச்சர்  வெளியிட்டார். இந்த சுற்றுலா கொள்கை 2023ல் 5 ஆண்டுகளில் 20000கோடி மூதலீட்டில் பல்வேறு சுற்றுலா திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலா கொள்கையின் ஒரு பங்காக கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தும் வகையில் சென்னையில் 20,000 சதுர அடியில் இசை மற்றும் நடன அருங்காட்சியகம்  அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள பல்வேறு கலைகள், நடனம் மற்றும் இசை வடிவங்களை காட்சிப்படுத்த ஒரு ஊடாடும் அருங்காட்சியகமாக இருக்கும் என்றும், இந்த அருங்காட்சியகத்தில்  கலை வடிவங்களை மேம்படுத்துவதற்கான செயல்திறன் இடங்கள், கலைக்கூடங்கள் மற்றும் பட்டறைகள் அமைக்கப்படுவதோடு, தமிழ் சினிமா, வரலாறு, மற்றும் பிரபல நடிகர்களை வெளிப்படுத்தும் வகையில், "கோலிவுட் கேலரி" இந்த கலை அருங்காட்சியகத்தில் நடத்தப்படும் எனவும் சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.