7 வருடங்கள் கடந்த 'பாகுபலி-1':

நான்கு வருடங்களாக உருவான இந்தியாவின் மிகப் பிரம்மாண்ட படமான பாகுபலி பாகம் 1 வெளியாகி 7 வருடங்கள் முடிந்தது.

7 வருடங்கள் கடந்த 'பாகுபலி-1':

தண்ணீர் கேன் முதல் கனமான எந்த பொருளைத் தூக்கினாலும் பாகுபலியின் பாடலைப் போட்டு, அவரைக் கேளி செய்வது வழக்கமாகி விட்டது. அது மட்டுமல்ல, கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற கேள்வியும் இரண்டாம் பாகம் வரும் வரை பலரது தலையையும் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தது.

மேலும், இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலக அளவில், ஆக்ஸ் ஆபீஸ் கலென்க்‌ஷனை பயங்கரமாக பெற்று, சுமார் 650 கோடிகள் தியேட்டர்களில் மட்டுமே வசூல் செய்த பெருமையும் பாகுபலி பாகம் 1-ஐயே சேரும். அத்தகைய பாகுபலி பாகம் 1 உருவாகி இன்றோடு 7 வருடங்கள் முடிவடைகிறது.

ஒரு படத்திற்காக, ஒருவர் மட்டுமின்றி, ஒட்டுமொத்த படக்குழுவும் இணைந்து 4 வாருடங்கள் கஷ்டப்பட்டு உருவான படம் தான் பாகுபலி. பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ராணா டகுபட்டி, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்கள் நடித்த இந்த படமானது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் உலக அளவில் தியேட்டர்களில் வெளியானது.

படத்தின் கதை இரண்டு பாகங்களாக பிரித்து வெளியிடப்பட்ட நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் வரை வேறு எந்த படத்திலும் நடிக்காமல் காத்திருந்தார் பிரபாஸ். ஏன் என்றால், தனது முழு கவனத்தையும் இந்த ஆகுபலி கதாபாத்திரத்திற்கே கொடுக்க வெண்டுமென்ற முனைபோடு தனது உழைப்பை முழுமையாக இந்த படத்திற்குக் கொடுத்தார் பிரபாஸ். இந்த படத்தின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை, கடலினும் அதிகம் என பாகுபலி படத்தின் இயக்குனரான எஸ் எஸ் ராஜமௌளி பல பேட்டிகளில் கர்வமாகக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு பிரம்மாண்ட படைப்பான இந்த படத்தின், கதை மட்டுமின்றி, பாடல்களும் மாபெரும் ஹிட்டடித்தது, அனைவரும் அறிந்ததே. எஸ் எஸ் ராஜமௌளியின் ஆஸ்தான இசையமைப்பாளரான எம் எம் கீரவாணி தான் இந்த படத்திற்கு தனது பிரம்மாண்ட இசையைக் கொடுத்திருந்தார். இந்த படம் மூலம், இந்திய திரையுலகிற்கான மதிப்பு, உலகளவில் அதிகரித்ததோடு, நடிகர் பிரபாசிற்கும், உச்ச நட்சத்திரம் என்ற பதவி கிடைத்தது.

இன்று வரை, தொலைக்காட்சியில் எபோது அந்த் அபடம் போட்டாலும் வியந்து பார்க்கும் ரசிகர்களைக் கொண்ட நிலையில், 7 வருடங்கள் கடந்த பாகுபலி படத்தை ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். மேலும், தங்களுக்கு அந்த படத்தில் மிகவும் பிடித்த காட்சிகளையும் சுட்டிக் காட்டி பகிர்ந்து வருகின்றனர்.

இந்த படத்தைத் தொடர்ந்து, சாகோ, ராதே ஷியாம் என ஒரு சில படங்கள் நடித்தாலும், பிரபாசிற்கு, பாகுபலி படத்தில் கிடைத்த அளவிற்கான வரவேற்புக் கிடக்கவில்லை என்பது தான் நிதர்சண உண்மை. ஆனால், தற்போது, 'ஆதிபுருஷ்', 'சலார்', 'புராஜெக்ட் கே' மற்றும் 'ஸ்பிரிட்' ஆகிய படங்களில் நடிக்கவுள்ள நிலையில், பிரபாசின் அடுத்த திரை தோற்றத்திற்காக ரசிகர்கள் வெகு ஆர்வமாகக் காத்து வருகின்றனர்.