
மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 65வது படமாக உருவாகி வரும் பீஸ்ட் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
நெல்சன் இயக்கி வரும் பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் பீஸ்ட் படம் குறித்து அப்டேட் கேட்டபோது கூட படத்தின் இயக்குனர் நெல்சன் சஸ்பென்ஸ் என கூறி அப்டேட் கூற மறுத்திருந்தார்.
இந்நிலையில் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
படப்பிடிப்பு நடைபெறும் பகுதியில் படக்குழுவினர் உட்பட பார்வையாளர்கள் என யாரும் புகைப்படம் எடுக்கவோ வீடியோ எடுக்கவோ அனுமதி கிடையாது. அப்படி இருந்தும் யாரோ வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
சண்டைக்காட்சி ஒன்றிற்காக மால் ஒன்றில் நடந்த காட்சியை சுமார் 40 வினாடி வீடியோவாக யாரோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இதுதவிர ரத்தக்கறை படிந்த சட்டையுடன் விஜய் நிற்கும் புகைப்படமும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
#Beast Shopping Mall Scene Leaked