அது விபூதி இல்ல... கொக்கைன்... - வட இந்திய ரசிகர்களை கேலி செய்யும் நெட்டிசன்கள்...

போதை பொருளால் வடிவமைக்கப்பட்ட ‘போலா’ படத்தின் டைட்டிள் வெளியாகியுள்ளது. 3டி யில் உருவாகி வரும் கைதி படத்தின் இந்தி ரீமேக்-கிற்கு ரசிகர் கூட்டம் குவிந்து வருகின்றனர்.

அது விபூதி இல்ல... கொக்கைன்... - வட இந்திய ரசிகர்களை கேலி செய்யும் நெட்டிசன்கள்...

மாநகரம் என்ற வித்தியாசமான படம் எடுத்தாலும், தமிழ் மட்டுமின்றி இந்திய சினிமாவிற்கே, லோகேஷ் கனகராஜ் என்ற இயக்குனர் தெரியவந்தது ‘கைதி’ என்ற படம் மூலமாக தான். காதலி இல்லை, பாடல்கள் இல்லை, ரொமேன்ஸ் இல்லை, ஆனாலும், ஒரு வெற்றிக் கதையை கொண்டு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற முடியும் என எடுத்து சொன்ன படம் தான் ‘கைதி’. இந்த படம் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து, அதனை இந்தியில் ரீமேக் செய்ய பல நிறுவனங்கள் முன் வந்தன. ஆனால், அதனை பெற்ற அதிர்ஷ்டசாலி, பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவகன் தான்.

மேலும் படிக்க | ஒருத்தன் கூட எழுதல...! - மேடையில் கொந்தளித்த ரஜினிகாந்த்...

சமீபத்தில் கூட, மோகன் லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான திருஷ்யம் பட தொடர்ச்சிகளை இந்தியில் ரீமேக் செய்து பெரிதாக வரவேற்புப் பெற்ற நிலையில், அஜய் தேவகனின் ரீமேக் படங்களுக்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் உருவாகி இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, தற்போது ‘கைதி’ படத்தை ‘போலா’ என்ற தலைப்பில் ரீமேக் செய்திருக்கும் அஜய் தேவகன் குழு, தங்களது படத்தின் டீசரை நாளை வெளியிட உள்ளனர். அதன் அதிகாரப்பூர்வ தகவலை “ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்” நிறுவனம் தங்களது சோசியல் மீடியாக்களில் வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க | நடிகர் கார்த்தியின் 25-வது திரைப்படம்...! வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்...!

மேலும், இந்த படமானது 3டியில் வெளியாகும் என தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் குஷியைக் கொடுத்துள்ளது என்று தான் கூற வேண்டும். வெளியான மோஷன் டைட்டிளில், “போலா” தலைப்பை வெள்ளைப் பொடியில் வடிவமைத்துள்ளனர். அந்த வெள்ளைப் பொடியை விபூதி என நினைத்து பல பாலிவுட் ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், தமிழ் படமான கைதி படத்தின் ரசிகர்கள், இந்த வெள்ளைப் பொடி, விபூதி இல்லை, அது கொக்கைன் என கமெண்ட் செய்து அவர்களை கேலி செய்து வருகின்றனர்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | ”பூமியில் உள்ள நரகம்” குவாண்டாமோ சிறைச்சாலை...!! சிறையிலிருந்து வெளியேறிய கடைசி பாகிஸ்தானி..!!!