விஜய் பட வாய்ப்பை இழந்த பிக்பாஸ் வின்னர் ராஜூ.. காரணம் இந்த கண்களா.? 

விஜய் பட வாய்ப்பை இழந்த பிக்பாஸ் வின்னர் ராஜூ.. காரணம் இந்த கண்களா.? 

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியின் வெற்றியாளாராக தேர்வானவர் ராஜூ ஜெயமோகன்.
நட்புனா என்னனு தெரியுமா என்கிற படத்தில் நடித்துள்ள இவர், இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றியவர். 

அதேசமயம் பத்து வருடங்களுக்கு முன் ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அவரிடம் இருந்து கைநழுவிப்போன விஷயம் தற்போது தெரியவந்துள்ளது.

 இந்தப்படத்தில் முக்கியமான இடம்பெற்ற மணிமாறன் கதாபாத்திரத்தின் ஜூனியர் வெர்சனில் நடிப்பதற்காக ராஜூ முதலில் தேர்வு செய்யப்பட்டார்.  

ஆனால்  சீனியர் மணிமாறனாக நடிக்க இருந்த விகாஷின் முக சாயலுடன் ராஜூவின் முக சாயலுடன் சரியாக மேட்ச் ஆகவில்லை. 
அதுக்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்பட்டது ராஜூவின் கண்கள். அதனால் ராஜூ அந்த கதாபாத்திரத்தில் இருந்து நீக்கப்பட்டதாக அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரியவந்துள்ளது.