உண்மைக்கதையில் நடிக்கிறார் பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி...

மனித உரிமை சார்ந்த உண்மை கதையில் நடிக்கிறார் பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி.
உண்மைக்கதையில் நடிக்கிறார் பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி...
Published on
Updated on
1 min read

பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் ராணி முகர்ஜி. சமீபத்தில் அவரது நடிப்பில் பண்டி ஆர் பாபில் 2 திரைப்படம் வெளியாகியிருந்தது. கதாநாயகியை மையப்படுத்திய படங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் ராணி முகர்ஜியின் அடுத்த திரைப்பட அறிவிப்பு வெளியாகிவுள்ளது.

அப்படத்திற்கு மிசரஸ் சட்டர்ஜி வெர்சஸ் நார்வே என்று பெயரிடபட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் இப்படம் அடுத்த ஆண்டு மே 20ஆம் தேதியன்று வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வ வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளனர். 

இப்படத்தினை இயக்குனர் அஷிமா சிப்பர் இயக்குகிறார். எம்மே நிறுவனத்துடன் இணைந்து ஜீ நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கவிருக்கின்றனர். மனித உரிமைகள் சார்ந்த உலகளாவிய உண்மை கதையை தழுவி இப்படம் எடுக்கப்படவிருக்கிறது. ஐரோப்பாவில் உள்ள எஸ்டோனியாவிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் இப்படம் படமாக்கப்பட இருக்கிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com