சரியாக கோ ஆப்பரேட் செய்யாத காதலன்...15 வயது குறைந்த காதல் ரசிகரை கழட்டிவிட்ட நடிகை...

பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தன்னுடைய பிரேக்கப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரபூர்வமாக கூறியுள்ளார்.

சரியாக கோ ஆப்பரேட் செய்யாத காதலன்...15 வயது குறைந்த காதல் ரசிகரை கழட்டிவிட்ட நடிகை...

பாலிவுட்டில் பிரபல நடிகையான சுஷ்மிதா சென்-னை தெரியாதவர்கள் என யாரும் இருக்க முடியாது. 1994-ல் மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்று, அதன் பின் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம்வரும் சுஷ்மிதா சென்னிற்உ தற்போது 44 வயதாகிறது.

இவருடைய நடிப்பில் உருவான ஆர்யா2 சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியானது. முதல் சீசன் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் சீசன் தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில், 44 வயதாகும் சுஷ்மிதா சென் தன்னை விட 15 வயது குறைந்த ரோமன் ஷால் என்ற நபரை கடந்த சில காலமாக காதலித்து வந்தார். சுஷ்மிதாவின் ரசிகரான அவர் சமூக வலைத்தளத்தில் அவருக்கு மெசேஜ் செய்து பேச ஆரம்பிக்கவே, அதன் மூலமாக அவர்கள் நடுவில் காதல் மலர்ந்து, அதன் பின் சுஷ்மிதா சென் அபார்ட்மெண்டில் தான் ரோமன் ஒன்றாக வசித்து வந்தார்.

 

இதனைத்தொடர்ந்து, சுஷ்மிதா மற்றும் அவரது இரண்டு மகள்கள் உடன் இருக்கும் பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது சுஷ்மிதா ரோமன் ஷாலை பிரேக்கப் செய்திருப்பதாக தகவல் வெளியானது. 

இதை உறுதிப்படுத்தும் விதமாக சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”நாங்கள் நண்பர்களாக ஆரம்பித்தோம், நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம் !! எங்கள் உறவு நீண்டு விட்டது...காதல் இன்னும் நிலைத்திருக்கிறது!! ”என்று பதிவிட்டுள்ளார்.