ஒரே வாரத்தில் ரூ. 200 கோடி வசூல்..பாக்ஸ் ஆபீஸ் கிங் அண்ணாத்த

ஒரே வாரத்தில் ரூ. 200 கோடி வசூல்..பாக்ஸ் ஆபீஸ் கிங் அண்ணாத்த
Published on
Updated on
1 min read

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியாகி விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் சக்கை போடு போட்டு வரும் திரைப்படம் அண்ணாத்த.

படம் வெளியான முதல்நாள் திரும்பிய பக்கமெல்லாம் படத்தைப் பற்றி எனக்கு விமர்சனங்கள் அளவுக்கு அதிகமாக இருந்தன. ஓபன் ஆக சொல்ல வேண்டுமென்றால் அனைவரும் ரஜினியை பயங்கரமாக தாக்கி பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஆனால் பெண்கள் மற்றும் குடும்ப ரசிகர்களின் பேராதரவை பெற்ற அண்ணாத்த திரைப்படத்தை பார்க்க குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு பெண்களும் குழந்தைகளும் படையெடுத்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

அண்ணாத்த படம் வெளியான முதல் வாரத்திலேயே உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.

அது மட்டும் இல்லாமல் வெறும் நான்கு நாட்களில் தமிழ்நாட்டில் 100 கோடி வசூல் செய்ததாகவும் ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com