“நல்ல திரைப்படங்களை ரசிகர்கள் கைவிடக்கூடாது” - கமல்ஹாசன்!!!

விக்ரம் படத்தின் 100 வது நாளைக் கொண்டாட, கோவையில் விழா நடந்தது. அதில், கமல்ஹாசன், திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கமல் பல கருத்துகளைப் பகிர்ந்தார்.

“நல்ல திரைப்படங்களை ரசிகர்கள் கைவிடக்கூடாது” - கமல்ஹாசன்!!!

கோவை: கே.ஜி. திரையரங்கில் விக்ரம் திரைப்படத்தின் 100 வது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் நடிகர் கமல்ஹாசன், திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்திரையரங்க ஊழியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கிய நடிகர் கமல்ஹாசனுக்கு, சிறப்பு அலங்கார வளைவுகள் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க | இந்தியன் 2 விற்காக அமெரிக்கா கிளம்பும் கமல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் இணை தயாரிப்பில் வெளியான வெற்றித் திரைப்படம் தான் விக்ரம். கமலஹாசனுடன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், சூரியா என்ற பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த இந்த படத்திற்கு, அனிருத் இசையமைத்த அனைத்து பாடல்களும் படு ஹிட்டானது.

மேலும் படிக்க | கமல் தயாரிப்பில் உதயநிதி; அதிரடியாக அறிவித்த உலக நாயகன்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியான இந்த படம் இன்றோடு, தியேட்டர்களில், 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. இதனைத் தொடர்ந்து, இதற்கான விழா கோவையில் நடந்ததை ஒட்டி, அந்த விழாவில் கலந்து கொண்ட கமல், தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அதில் பேசிய அவர், “ஒடிடி காலக்கட்டங்களில் தியேட்டர்களுக்கு இளைஞர்களை வரவழைத்து வெற்றிப் பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் போல சினிமாவும் என்னை 63 ஆண்டு காலமாக வாழ வைத்துள்ளது. ஆரம்ப காலத்தில் எனது படங்கள் எனக்கு பெரும் பிரபலத்தைப் பெற்று தரவில்லை. ஆனால், அதற்காக நான் உழைத்து தற்போது இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்” என்று கூறி, உணர்ச்சிவசப் பட்டார்.

மேலும் படிக்க | தியேட்டர்களில் மட்டுமல்ல, ஓடிடி தளத்திலும் ரெக்கார்ட் பிரேக்! - விக்ரம் படத்தின் அடுத்த சாதனை:

பின், சினிமா குறித்து பேசுகையில், நல்ல படங்களை ரசிகர்கள் கைவிடக் கூடாது என கோரிக்கை விடுத்தார். மேலும் பேசியவர், “ஒரு படத்தின் வெற்றியை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவது மேலும் சிறந்த திரைப்படங்கள் எடுக்க உத்வேகமாக அமையும். நல்ல நடிகர்களை வாழ்த்துங்கள்மக்கள் வாழ்த்தினால் சம்பளம் இரண்டு மடங்கு ஆகும். என்னை மட்டுமல்ல. நன்றாக நடிக்கும் அனைத்து நடிகர்களையும் வாழ்த்துங்கள். எங்கள் சினிமா இன்னும் சிறப்பாக இருக்கும்.” எனக் கூறினார். இந்த பேச்சு, பல பெரும் கரகோஷத்துடன் வரவேற்கப்பட்டது.

ஏற்கனவே, உதயநிதியை வைத்து படம் எடுக்க விரும்புவதாகக் கூறிய நிலையில், படங்களையும் நடிகர்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் உத்வேகப் படுத்த ரசிகர்களைத் தூண்டியது பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இந்தியை திமுக எதிர்த்தது இல்லை!- உதயநிதி ஸ்டாலின்: