எப்பா கருணாநிதி மகனையே கைது பண்ணிட்டாங்களாம்...  கருணாநிதி, எம்ஜிஆர்... எமர்ஜென்சி எதிர்ப்பு!!   ராவா காட்டிய ரஞ்சித்... 

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை, பாக்ஸிங்கை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் படம்.

எப்பா கருணாநிதி மகனையே கைது பண்ணிட்டாங்களாம்...  கருணாநிதி, எம்ஜிஆர்... எமர்ஜென்சி எதிர்ப்பு!!   ராவா காட்டிய ரஞ்சித்... 
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை, பாக்ஸிங்கை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படம், அமேஸான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள இந்த படம் பக்கா தியேட்டர் மெட்டீரியல்.

என்னதான் குத்துச்சண்டை படமாக இருந்தாலும் ரஞ்சித்தின் வழக்கமான அரசியல் இந்த படத்திலும் இருக்கிறது. வடசென்னையில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தொடங்கி 90களின் கடைசி வரை வட சென்னை மக்களின் வாழ்வியலில் ஒன்றாக கலந்திருந்த பாக்சிங் கலாச்சாரத்தை அப்படியே செதுக்கியிருக்கிறார். அப்போது நடந்த அரசியல் பிரச்சனைகளை பாக்சிங்கிற்கு இடையில் வெளிப்படையாக காட்டியிருக்கிறார்.

 மலையாள சினிமாக்களில் பொதுவாக எல்டிஎப், யுடிஎப் சார்ந்த காட்சிகளை அதே கட்சி பெயர் சொல்லி, வெளிப்படையாக எடுப்பது வழக்கம். அந்த வகையில் முதல்முறையாக எமர்ஜென்சி எதிர்ப்பு, திமுக, அதிமுக மோதல்  எம்ஜிஆர், கருணாநிதி, காங்கிரஸ் என்று அரசியல் தலைவர்களின் பெயர்களை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். எமர்ஜென்சி காலத்தில் நடந்த அரசியல் மோதல்களை அப்படியே   ரஞ்சித் தனது ஸ்டைலில் பதிவு செய்து இருக்கிறார்.
 
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியும் அன்று பாக்சிங் கலாச்சாரத்தை வெளிப்படையாக ஆதரித்தார். பாக்சிங் போட்டிகளை திமுக எப்படி எல்லாம் ஆதரித்தது என்பதை வெளிப்படையாக கட்சி பெயரையும், கட்சி கருப்பு சிவப்பு கொடியை காட்டியும் தைரியமாக விளக்கி இருக்கிறார். சார்பட்டா பரம்பரை வீரரை திமுககாரராக அதாவது கருப்பு சிவப்பு துண்டு, வேட்டி கட்டியும், இடியாப்ப நாயாக்கர் பரம்பரை வீரர் வில்லன் வேம்புலியை  காங்கிரஸ் கொடி, துண்டு வேட்டி கட்டியும் எமர்ஜென்சி சமயத்தில் இருந்த மோதலை பதிவு செய்துள்ளார். அப்போது பாக்ஸர்கள் பலர் திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் நெருக்கமாக இருந்தது என்பதையும் காட்சி படுத்தியிருக்கிறார்.

திமுக எமர்ஜென்சி காலத்தில் காங்கிரசை எப்படி எதிர்த்தது. காங்கிரசுக்கு எதிராக திமுகவினர் எப்படி போராடினார்கள்? எங்கெல்லாம் கைது செய்யப்பட்டார்கள் என்பதையும் பதிவு செய்துள்ளார். படத்தில் ஆங்காங்கே ஓபனாக திமுக ஆதரவு அரசியல் பேசியிருக்கிறார்.
 
திமுக எமர்ஜென்சியை எப்படி எதிர்த்தது, தமிழ்நாட்டில் யாரெல்லாம் எமர்ஜென்சிக்கு எதிராக குரல் கொடுத்தார்கள் என்பதுதான், எமர்ஜென்சி காலத்தில் திமுகவினர் உள்ளே இருந்ததால் வெளியே வடசென்னையின் பாக்சிங் எப்படி தடம் மாறியது, அதில் ரவுடியிசம், கள்ளச்சாராயம் எப்படி புகுந்தது என்பதையும் ஒளிவு மறைவின்றி காட்டியுள்ளார். 

பிரதமர் இந்திராகாந்தியின் சர்வாதிகாரம், எமர்ஜென்சி என்ற பெயரில் இந்தியாவை சிதைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் நம் தலைவர் ஆட்சியால் காப்பாற்றப்படுகிறோம் என கருணாநிதியின் ஆதரவாளராக பசுபதியின் காட்சி மூலம் அப்போதைய எமர்ஜென்சி எதிர்ப்பு போராட்டத்தை காட்டியிருக்கிறார். எமர்ஜென்சி சமயத்தில் ஒரு காட்சியில்.. "எப்பா கருணாநிதி மகனையே கைது பண்ணிட்டாங்களாம். பாக்சிங்கை நிறுத்துங்க" என்று முதல்வர் ஸ்டாலின் எமர்ஜென்சியில் கைது செய்யப்பட்டதை கூட காட்டியிருக்கிறார்கள்.

இதில் சில பாக்சிங் வீரர்கள் அ.தி.மு.க புள்ளி ஒருவருடன் சேர்ந்துகொண்டு திசை மாறுவதாக காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி ஆதரவாளராக இருக்கும் ஹீரோ எம்.ஜி.ஆர். ஆதரவாளராக மாறி, அதன்பின் பாக்சிங் ஆடாமல் திசை மாறும் காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்,. ஆட்சி காலத்தில் வடசென்னையில் அதிமுக புள்ளியில் கட்டுப்பாட்டில் சில குத்துசண்டை வீரர்கள் இருந்ததையும், அவர்கள் சிறைக்கு சென்றதை சுட்டிக்காட்டியிருக்கிறார்.