நடிகர் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை!!

நடிகர் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை!!

பெங்களூரு விமான நிலைய தாக்குதல் விவகாரத்தில்,  நடிகர் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்தாண்டு பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்த மகா காந்தி என்பவர், விஜய் சேதுபதியை பாராட்டி வாழ்த்தியதாக கூறப்படுகிறது.

ஆனால் பதிலுக்கு விஜய்சேதுபதி அவரை தாக்கி சாதியை இழிவுப்படுத்தி பேசியதாக  மகா காந்தி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.  இதனை எதிர்த்து நடிகர் விஜய் சேதுபதி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நேற்று  நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை கீழமை நீதிமன்றம் விசாரிக்க முடியாது என விஜய்சேதுபதி தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, நடிகர் விஜய் சேதுபதி மீது  நடவடிக்கை எடுக்க இரண்டு வாரங்களுக்கு தடை விதித்து, விசாரணையை மார்ச் 3 தேதிக்கு ஒத்திவைத்தார்.