ஆஸ்கார் விழாவை தொகுத்து வழங்கும் வாய்ப்பை நிராகரித்த நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்...!

ஆஸ்கார் விழாவை தொகுத்து வழங்கும் வாய்ப்பை நிராகரித்த நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்...!
Published on
Updated on
1 min read

நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், ஆஸ்கார்- 2023 விழாவை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பை நிராகரித்ததாக அவரது சமீபத்திய ஸ்டாண்டப் காமெடி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கிறிஸ் ராக், எதார்த்தமாக நடிகர் வில்ஸ்மித்தின் மனைவியான ஜடா பிங்கெட் ஸ்மித்தை கிண்டல் செய்துள்ளார். ஜடாவுக்கு ஏற்பட்ட தீவிர தொற்றினால் அவரது தலைமுடி இல்லாமல் மொட்டையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆத்திரம் அடைந்த வில்ஸ்மித் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை மேடை ஏறி கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.   

வில்ஸ்மித்தின் இந்த செயலுக்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும், நடிகர் வில்ஸ்மித் தனது செயலுக்காக இரண்டு முறை மன்னிப்பும் கேட்டுள்ளார். ஆனால் கிறிஸ் ராக் இதனை மறக்க தயாராக இல்லை என்பது போல தெரிகிறது. 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று, அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் உள்ள அரிசோனா ஃபைனான்சியல் தியேட்டரில் நடைபெற்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் போது, ​ மீண்டும் ஆஸ்கார் விருதுக்கு செல்வது ஒரு குற்றம் நடந்த இடத்திற்குத் திரும்புவது போன்று என ஒப்பிட்டார், கிறிஸ் ராக். மேலும் ஆஸ்கார் விருதுகள் மட்டுமல்ல, இந்த ஆண்டு ஆஸ்கார் நிகழ்ச்சியில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து சூப்பர் பவுல் விளம்பரத்தில் தோன்றும் வாய்ப்பையும் கிறிஸ் நிராகரித்துள்ளதாக கூறியுள்ளார்.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com