என்னது ”நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்” - ல் வடிவேலு ”trap” சாங் பாடுறாரா? அப்போ...டபுள் ட்ரிட் தா போங்க...

என்னது ”நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்” - ல் வடிவேலு ”trap” சாங் பாடுறாரா? அப்போ...டபுள் ட்ரிட் தா போங்க...

நகைச்சுவையால் அனைவரையும் பெரும் அளவில் ஈர்த்து தன் கைவசம் வைத்திருப்பவர் தான் வடிவேலு. தற்போது லைகா தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்த வருகிறார்.

இந்த படம் மூலம் நகைச்சுவையின் மாமன்னன் மீண்டும் வெள்ளித்திரையில் செம கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகி வருகிறது. அட ஆமாங்க இந்த படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் கூட லண்டனுக்கு எல்லாம்  சென்று செம வித்தியாசமாக இசையமைத்து வருகிறாராம்.

இந்நிலையில் நாய்சேகர் படத்திற்காக காமெடி லெஜண்ட் வடிவேலு ஒரு டிராப் சாங் பாடியிருக்கும் அட்டகாசமான தகவலை வீடியோவுடன் போட்டு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.

சும்மா ஆடத்தூண்டும் இசையுடன் சேர்ந்து உருவாகி இருக்கும் அப்படியொரு டிராப் பாடலைத் தான் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்காக வடிவேலு பாடி உள்ளாராம்.

ஏற்கனவே வைகைப்புயல் வடிவேலு எட்டணா இருந்தா, வாடி பொட்ட புள்ள வெளியே, சந்தன மல்லிகையில் என ஏகப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களை பாடி அசத்தி உள்ளார். அந்த வகையில் தற்போது, நடிகராக மட்டுமின்றி பாடகராகவும் ரிட்டர்ன் ஆக உள்ளார் வடிவேலு என்பது ரசிகர்களுக்கு மத்தியில் இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.