வட்டு கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ.. மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்.. வைரல் புகைப்படம்

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிபோன மீரா மிதுன் பட்டியல் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை மீரா மிதுன் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.

வட்டு கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ.. மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்.. வைரல் புகைப்படம்

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் நடிகை மீரா மிதுன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். 

இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் நடிகை மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். பின்னர் கேரளாவில் பதுங்கி இருந்த மீரா மிதுனை போலீசார் பெரும் போராட்டத்துக்கு இடையே கைது செய்தனர். 

அப்போது கூச்சலிட்டபடியே வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் மீரா மிதுன். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் கோரி மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுன் தரப்பில், 35 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதாலும், கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் சோர்வு ஏற்பட்டிருப்பதாகவும் ஜாமீன் வழங்க கோரியது.

இதை பதிவு செய்த நீதிபதி, நடிகை மீராமிதுன், அவரின் நண்பர் சாம் அபிஷேக் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் மேலும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தினமும் இருவரும் கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து மீரா மிதுன், சாம் அபிஷேக் இருவரும் நிபந்தனை ஜாமீனில் புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.