மலையாள நடிகர் மம்முட்டிக்கு கொரோனா உறுதி..!

லேசான காய்ச்சலுடன் நலமுடன் இருப்பதாக தகவல்..!

மலையாள நடிகர் மம்முட்டிக்கு கொரோனா உறுதி..!

பிரபல மலையாள மெகா ஸ்டார் மம்முட்டிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சிபிஐ 5 திரைப்படத்தின் படப்பிடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வந்த நிலையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லேசான காய்ச்சலுடன் தான் நலமுடன் இருப்பதாகவும், மருத்துவர்கள் அறிவுரைப்படி தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.