
டான்ஸ் மாஸ்டர் சாண்டி ஹீரோவாக நடிக்கும் ‘3:33’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
டான்ஸ் மாஸ்டர் சாண்டி தனியார் நிக்ழ்ச்சி ஒன்றின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர். தொடர்ந்து தமிழில் பல படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் சாண்டி 3:33 என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். அறிமுக இயக்குனர் நம்பிக்கை சந்துரு இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
காமெடி மற்றும் பாடல்கள் இல்லாத திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. படத்தில் ரேஷ்மா பசுபுலேதி, ராமா, மைம் கோபி மற்றும் சரவணன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. 3:33 திரைப்படம் அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.