ஹாலிவுட் படப்பிடிப்பு தளத்தில் தனுஷ்..! வைரலாகிவரும் புகைப்படம்..!

நடிகர் தனுஷ் அவர்கள் 'தி க்ரே மேன்' படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம்  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஹாலிவுட் படப்பிடிப்பு தளத்தில் தனுஷ்..! வைரலாகிவரும் புகைப்படம்..!
Published on
Updated on
1 min read

இந்திய திரையுலகில் மிகவும் பிஸியான நடிகராக வலம்வருபவர் நடிகர் தனுஷ். அவருடைய நடிப்பில் அதிரங்கி ரே, மாறன் திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயார் நிலையில் உள்ளது. இது மட்டுமில்லாமல் நடிகர் தனுஷ் ஹாலிவுட் திரைப்படமான 'தி க்ரே மேன்' படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் ரேயான் கோஸ்லிங், க்ரிஸ் இவான்ஸ் கதாநாயகர்களாக மடித்து வருகின்றனர். ரூசோ சகோதரர்கள் இப்படத்தினை இயக்கி வருகின்றார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல மாதங்கள் அமெரிக்காவில் தங்கி இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் தனுஷ். ஆனால் அப்படத்தின் புகைப்படங்கள் ஒன்று கூட வெளியாகவில்லை. அது அவரது ரசிகர்களை மிகுந்த ஏமாற்றம் அடைய செய்தது. இந்நிலையில் நடிகர் தனுஷ் அவர்கள் 'தி க்ரே மேன்' படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம்  இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
 
இப்படத்தினை நெட்ப்ளிக்ஸ் தயாரித்து வருகின்றது. இப்படம் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com