நடிகர் அஜித்தை வைத்து படம் இயக்க ஆசை- 12 வயது இயக்குநர்...

12 வயதில் சினிமா துறையில் சாதித்து வரும் கேரள சிறுவன் ஆஷிக் நடிகர் அஜித்தை வைத்து படம் இயக்க ஆர்வம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.  

நடிகர் அஜித்தை வைத்து படம் இயக்க ஆசை- 12 வயது இயக்குநர்...

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த 12 வயது சிறுவன் மாஸ்டர் ஆஷிக் ஜினு . சிறுவயது முதலே சினிமா மீது ஆர்வம் கொண்ட ஆஷிக் இதுவரை ஆறு குறும்படங்கள் ஒரு ஆவணப்படம் மற்றும் இரண்டு வணிக ரீதியிலான படங்களை இயக்கி அசத்தியுள்ளார்.

சிறுவன் ஆஷிக் இயக்கிய முதல் குறும்படமான பிடிகா என்ற குறும்படம் கேரளாவின் மிக சிறந்த நுகர்வோர் விழிப்புணர்வு படமாக பேசப்பட்டுள்ளது. மற்றொரு குறும்படமான பசி என்ற குறும்படம் மூலம் 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த குறும்பட இயக்குனருக்கான விருதும் கிடைத்துள்ளது.மேலும் இளம் இயக்குனர்களுக்கு இந்திய அளவிலான யுனிவர்சல் ரெக்கார்டு போரம் விருதையும் பெற்றுள்ள சிறுவன் ஆஷிக் கொரோனா ஊரடங்கு சமயத்தில் தி ரூல்ஸ் ஆஃப் பீஸ் என்கின்ற குறும்படத்தை இயக்கி சிறந்த ஊரடங்கு திரைப்படத்திற்கான இன்டர்நேஷனல் விருதையும் பெற்றுள்ளார்.

ஆறு குறும்படங்களை இயக்கி வந்த சிறுவன் தி கொலம்பியன் அகாடமி என்ற வணிக ரீதியிலான முதல் படத்தை இயக்கி உள்ள நிலையில் தற்போது இரண்டாவது திரைப்படமாக போதை அடிமையில் இருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஈவிஏ எனும் திரைப்படத்தை தமிழில் இயக்கியுள்ளார். 30 நாட்களில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வெளியிடப்பட்டது.