கார்த்திக் சுப்புராஜின் தந்திரத்தில் சிக்கிய தனுஷ்.... ரசிகர்களுக்கு நெட்டிசன்கள் அலர்ட்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ நேற்று ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

கார்த்திக் சுப்புராஜின் தந்திரத்தில் சிக்கிய தனுஷ்.... ரசிகர்களுக்கு நெட்டிசன்கள் அலர்ட்

சமீபத்தில் ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியது. டிரைலரில் தனுஷ் பேசிய “ சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா” டைலாக் மிகவும் பிரபலமடைந்து. இந்நிலையில் நேற்று ஒடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியானது.

திரையரங்குகளில் வெளியாகவில்லை, என்று தனுஷும் அவருடைய ரசிகர்களும் கவலை அடைந்த நிலையில், படத்தின் ரிசல்ட் அதைவிட பெரிய கவலையை அவர்களுக்கு அளித்திருக்கிறது.

 படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை லாஜிக்யே இல்லை என கூற படம் சுமார் 3 நாட்கள் கடந்த ஒரு உணர்வு ஏற்படுவதாகவும் சிலர் விமர்சித்திருக்கிறார்கள்.

தனுஷை தமிழகத்தில் பெரிய ரவுடியாக காட்டுவதற்காக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சித்தரித்த பயங்கரமான ஒரு காட்சி, வடிவேலுவின் காமெடியை மிஞ்சும் அளவுக்கு இருக்கிறது. 

மொத்தத்தில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தந்திரத்தில் சிக்கிய தனுஷை போல், அவருடைய ரசிகர்கள் சிக்காமல் தப்பிக்க வேண்டும் என்றால், இந்த ‘ஜகமே தந்திரம்’ படத்தை பார்க்காமல் இருப்பது நல்லது என்று கூறுகின்றனர் நெட்டிசன்கள்.