பிகினி உடையால் வித்யூலேகாவிற்கு விவாகரத்தா? அவரே வெளியிட்ட வைரல் பதிவு

பிகினி உடையால் வித்யூலேகாவிற்கு விவாகரத்தா? அவரே வெளியிட்ட வைரல் பதிவு
Published on
Updated on
1 min read

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா.

இதையடுத்து தீயா வேலைசெய்யனும் குமாரு, ஜில்லா, வீரம், புலி, வேதாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் சஞ்சய் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர், தற்போது மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளார். 

அப்போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

இந்தப் புகைப்படத்திற்கு சிலர் அவருடைய ஆடையை பற்றிய கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அதில் ஒருவர் உங்களுக்கு விவாகரத்து எப்போது? என்று கேட்டுள்ளார்.

அதற்கு பதிலடி தரும் வகையில் ஒரு பெண்ணின் உடை தான் அவரது விவாகரத்துக்கு காரணமாக இருக்கும் என்றால் சரியாக உடை அணியும் பெண்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? என்று கேட்டுள்ளார்.

ஒரு நல்ல கணவர் கிடைத்திருப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். மேலும் அவர் இது போன்ற கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்க தேவையில்லை என்று கூறினார். ஆனால் என்னால் அப்படி கடந்து போகமுடியவில்லை.

மேலும் பெண்களை அடக்க முறையோடு முற்றிலும் அவமதிக்கும் வகையில் நீங்கள் பார்க்கும் விதத்துக்கு உங்கள் வீட்டில் உள்ள பெண்களே அதற்கு பதில் அளிப்பார்கள் என்று நம்புகிறேன். வாழு அல்லது வாழவிடு என்று மிகவும் கோவமாக பதிவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com