"AK 61" படத்தின் கதை என்னன்னு தெரியுமா.? டைட்டில் இதுதானாம்.?

வலிமை படத்தின் மிக பெரிய வெற்றியை தொடர்ந்து அஜித் நடிக்கும் ஏகே 61 படத்தின் கதை என்ன என்ற தகவல் வெளியாகி உள்ளது.
"AK 61" படத்தின் கதை என்னன்னு தெரியுமா.? டைட்டில் இதுதானாம்.?
Published on
Updated on
2 min read

அஜித் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியான "வலிமை" படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இப்படம் 300 கோடி வசூலை நெருங்க போகிறது. 

வலிமை படம் ரிலீஸ் ஆனா கையோடு ஏகே 61 படத்தின் வேலையை அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் ஆகியோர் தொடங்கி விட்டனர். ஏகே 61ல் அஜித், ஹீரோ - வில்லன் என இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  அதன் படி, இப்படத்திற்காக 25 கிலோ எடை குறைக்க உள்ளாராம் அஜித். அதில் ஏற்கனவே 10 கிலோ குறைத்து விட்டாராம்..

மேலும் இப்படத்தில் தபு, அதிதி ராவ், பிரகாஷ் ராஜ், பிக்பாஸ் கவின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அஜித் நீண்ட வெள்ளை தாடியுடன் இருக்கும் நெகடிவ் இமேஜை போனி கபூர் வெளியிட்டார். இந்த புகைப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவியது. அஜித்தின் நியூ லுக் போட்டோஸ் இணையத்தை தெறிக்க விட்டு வந்து.

இந்நிலையில், ஏகே 61 படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வங்கி கொள்ளையை மையமாகக் கொண்டு தான் இந்த படத்தின் கதை இருக்குமாம்.. மங்காத்தா படத்தை அடுத்து அஜித் நடிக்கும் கொள்ளை படம் இதுவாக தான் இருக்கும்..  2022 தீபாவளிக்கு AK61ஐ வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளாராம்.

இப்படத்தின் ஷூட்டிங் மார்ச் 9ஆம் தேதி ஐதராபாத்தில் துவங்கவுள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.  அதன்படி, இன்று பிரமாண்ட பூஜையுடன் தொடங்கும் ஏகே61 படப்பிடிப்பை முன்னிட்டு படத்தின் தலைப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. ஏகே 61 படத்திற்கு வல்லமை என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com