சிம்பு பிறந்தநாளில் ரசிகர்களுக்கு டபுள் டிரீட்!! வெளியான ரகசிய தகவல்
நடிகர் சிம்புவின் பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு டபுள் விருந்து...

வருகின்ற பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி நடிகர் சிம்பு தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் நிலையில், அவரது பிறந்த நாளில் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் டபுள் விருந்து காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.
இந்நிலையில் பிப்ரவரி 3 ஆம் தேதி சிம்பு நடித்துவரும் ’பத்து தல’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என்றும், அதுவும் சிம்புவின் கெட்டப் உடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை ’பத்து தல’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் மறைமுகமாக அறிவித்து உள்ளது.
அதேபோன்று சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் சிங்கிள் பாடல் பிப்ரவரி 3ஆம் தேதியன்று வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நடிகர் சிம்புவின் பிறந்த நாளுக்கு டபுள் டிரீட் இருப்பதாக தகவல் கசிந்து வருகிறது.
#Feb3rd..
— Studio Green (@StudioGreen2) January 26, 2022