லியோ படப்பிடிப்பு நடக்கும் காஷ்மீர் பகுதியில் நிலநடுக்கம்....!!!

லியோ படப்பிடிப்பு நடக்கும் காஷ்மீர் பகுதியில் நிலநடுக்கம்....!!!

லியோ திரைப்படத்தின் முதற்கட்ட படபிடிப்பு முடிந்து நடிகர் விஜய் இன்று காலை சென்னை திரும்பிய நிலையில் காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது  திரையுலகில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை த்ரிஷா, இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட திரையுலக பட்டாளமே நடித்து வரும் திரைப்படம் லியோ.   இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகளானது காஷ்மீர் பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் நடிகர் சஞ்சய் தத் தனது காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பினார்.  அதேபோல் இன்று நடிகர் விஜய்யும் லியோ திரைப்படத்தின் தனது காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ள நிலையில் படக்குழு முழுவதும் இன்னும் காஷ்மீரிலே தங்கியுள்ளனர்.

இந்நிலையில் லியோ திரைப்படம் நடக்கும் காஷ்மீர் பகுதிகளில் எதிர்பாராத விதமாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னா , நடிகைகள் த்ரிஷா மற்றும் பிரியா ஆனந்த் மற்றும் படக்குழுவை சார்ந்த  மற்றவர்கள் என அனைவரும் இன்னும் காஷ்மீரிலே இருப்பதாகவும் இந்த நிலநடுக்கத்தில் படக்குழுவை சார்ந்தவர்கள் யாரேனும் காயமடைந்தனரா அல்லது ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டதா என்று தகவல்கள் பரவி வந்த நிலையில், இது குறித்து தயாரிப்பு நிறுவனமானது படக்குழுவை சார்ந்த தாங்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளனர்.

இதையும் படிக்க:  இந்தியா இதில் முன்னோடியாக இருந்திருக்க வேண்டும்... இன்னும் தாமதமில்லை!!