'லைகா' அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை!

'லைகா' அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை!

லைகா தயாரிப்பு நிறுவனம் தொடர்புடைய பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

இலங்கையை பூர்விகமாக கொண்ட லைகா குழுமம், இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் செல்போன், சிம்கார்டு, சினிமா புரொடக்‌ஷன், டிஜிட்டல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. லைகா நிறுவனத்தின் உரிமையாளரான சுபாஷ்கரன் 2006ஆம் ஆண்டு லைக்கா மொபைல்ஸ் என்ற நிறுவனம் தொடங்கி தற்போது 16க்கும் மேற்பட்ட தொழில்களில் உலகம் முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக லைக்கா நிறுவனம் கத்தி, எந்திரன் 2.0, பொன்னியின் செல்வன், தர்பார் என பல முன்னணி நடிகர்களை வைத்து பல பிரமாண்ட  திரைப்படங்களையும் தயாரித்துள்ளது. இந்தியன் 2, விடா முயற்சி போன்ற படங்களையும் தற்போது தயாரித்து வருகிறது.16 Things You Need To Know About Lycamobile's Links To The Tories 

இந்த நிலையில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக லைக்கா குழுமம் தொடர்புடைய தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தி.நகர் விஜயராகவா சாலையில் உள்ள லைகா தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் லைகா அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட லைக்கா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. Ponniyin Selvan 2 review: Mani Ratnam's sequel to PS-1 is a tremendous  accomplishment

சமீபத்தில் லைக்கா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரம்மாண்ட வசூல் செய்துள்ளதால் நடிகர்களுக்கு வழங்கிய சம்பள தொகை, இதில் சட்டவிரோத பணபரிமாற்றம் ஏதும் நிகழ்ந்துள்ளதா என அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்து வருவதாக  தகவல் வெளியாகி உள்ளது. அதே போல தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களை மட்டுமே வைத்து அதிக பொருட்செலவில் தயாரிப்பில் ஈடுபட்டு முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளதால் கடந்த ஆண்டுகளில் ஈட்டிய வருவாயின் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்து வருவதாகவும், இந்தியாவில் தயாரிப்பு நிறுவனம் மூலமாக சம்பாதித்த பணத்தை  சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டு வெளிநாடுகளில் சொத்துக்குவிப்பில் சுபாஷ்கரன் ஈடுபட்டுள்ளாரா? என்ற பல கோணங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க:'ஒற்றை பதவி'க்கு அடித்துக்கொள்ளும் மதிமுக நிர்வாகிகள்!