'எஞ்சாயி எஞ்சாமி' பாடலுக்கு மெட் அமைத்தது நான் தான் - போட்டியிடும் சந்தோஷ் நாராயணன், அறிவு!!

'எஞ்சாயி எஞ்சாமி' பாடலுக்கு மெட் அமைத்தது நான் தான் - போட்டியிடும் சந்தோஷ் நாராயணன், அறிவு!!

எஞ்சாயி எஞ்சாமி பாடல் மூலமா புகழ்பெற்ற தெருக்குரல் அறிவு, செஸ் ஒலிம்பியாட் போட்டியில தன்ன புறக்கணித்து விட்டதாக கூறி வேதனையுடன் அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவு செய்திருந்தார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அறிவு பதிவிட்ட பதிவுக்கு அறிக்கை மூலம் பதில் தெரிவித்துள்ளார்.

2022ம் ஆண்டின் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியானது, கடந்த ஜூலை 29ம் தேதி தொடங்கி, வருகிற ஆகஸ்டு மாதம் 10ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த போட்டியினுடைய தொடக்க விழா கடந்த 28-ம் தேதி நேரு விளையாட்டரங்கத்தில் நடந்தது. சென்னை ஜவகர்லால் நேரு அரங்கில், பலதரப்பட்டவர்களுடன், பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கோலாகலமாக இந்த விழா நடந்தது.

இந்நிகழ்ச்சியில் அனைவராலும் ரசிக்கப்பட்ட சந்தோஷ் நாராயணன் மகளான தீயும், கிடாக்குழு மாரியம்மாளும் பாடின இந்த எஞ்சாயி, எஞ்சாமி பாடல். என்னதான் அனைவராலும் ரசிக்கப்பட்டாலும், இந்த பாட்டுக்கு சொந்தக்காரர் தெருக்குரல் அறிவு ஏன் இந்த நிகழ்ச்சியில பங்கு பெறவில்லை என்று கேள்வி எழுந்து வந்தது.

இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த போது அறிவு அமெரிக்காவில் இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து, தற்போது அறிவு வெளியிட்ட இன்ஸ்டாக்ராம் பதிவு வைரலாகி வருகிறது.

இது குறித்து, தனது இன்ஸ்டாகிராமில், இந்த பாடலை, முழுமையாக எழுதி, இசையமைத்து பாடிய நான், யாருடைய உதவியும் எதிர்பார்த்து நிற்கவில்லை எனத் துவங்கி தன் மனக்குமுறல்களை வெளிப்படுத்தினார்.

மேலும் படிக்க | தூக்கமின்றி கொடுத்த எனது உழைப்புக்குக் கிடைத்த ஊதியமா இது?- கவலையை வெளிப்படுத்திய தெருக்குரல் அறிவு!!

இதற்கு அறிக்கை மூலம் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதில் அளித்துள்ளார்.

அதில், “'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் உடனான எனது பயணத்தைப் பற்றி கூற விரும்புகிறேன். கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், நமது வரலாற்றையும் இயற்கையும் கொண்டாடும் விதமாக தமிழில் ஒரு பாடல் உருவாக்க வேண்டும் என்று தீ என்னிடம் கூறினார். இதனைத் தொடர்ந்து நான், தீ, அறிவு ஒருவர் மீது ஒருவர் வைத்த மதிப்புடன் இதில் இணைந்து பணியாற்றினோம்.

பாடலை தீயும், அறிவும் பாடினார்கள், பாடல் எப்படி அமைய வேண்டும் என்பதிலும் இருவரும் பங்கெடுத்தார்கள். இதில் தீ பாடிய வரிகளுக்கான பாடல் மெட்டை அவரே உருவாக்கினார். பிற வரிகளுக்கான மெட்டை நான் உருவாக்கினேன். அறிவு பாடிய வரிகளுக்கான மெட்டையும் நான் உருவாக்கி இருந்தேன்.

இப்பாடலின் வரிகளுக்கு அறிவுடன் இணைந்து நிறைய நேரம் செலவிட்டேன். பாடலில் இடம்பெற்றிருந்த ஒப்பாரி வரிகளுக்கு அரக்கோணம் பகுதி சுற்று வட்டாரத்தில் தாத்தாக்களும், பாட்டிகளும் உதவினர். அவர்களின் பங்களிப்புக்கு மதிப்பளித்த அறிவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

'எஞ்சாயி எஞ்சாமி’ பாடலை ஒட்டு மொத்தமாக முடிக்க நாங்கள் 30 மணி நேரம் எடுத்துக் கொண்டோம். பாடல் பதிவு செய்யும்போது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். இப்பாடலின் மூலம் வந்த வருமானம் அனைத்தையும் நான், தீ, அறிவு சமமாகவே பங்கிட்டு கொண்டோம் என்பதை வெளிப்படையாகவே கூறுகிறேன்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில், ‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் நிகழ்வில் அமெரிக்கப் பயணம் காரணமாக அறிவு பங்கேற்க இயலாது என்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் நாங்கள் தெரிவித்துவிட்டோம்.
நான் எப்போதும் அறிவை சிறந்த கலைஞர் என்றே உணர்கிறேன். நான் எப்போதும் எனது படைப்பு தளத்தை ஒடுக்கப்பட்டவர்களுக்காவே பயன்படுத்தி கொண்டிருக்கிறேன். 

இம்மண்ணின் கலைக்கும், கலைஞர்களுக்கும் என்னிடம் அன்பு மட்டுமே உள்ளது. ’எஞ்சாயி எஞ்சாமி' குறித்து இப்பாடலில் பங்கெடுத்த கலைஞர்கள், என்னிடம் தனிப்பட்ட முறையிலும், பொதுவெளியிலும் விவாதிக்க நான் தயாராகவே இருக்கிறேன்” என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஞ்சாயி, எஞ்சாமி பாடல் மூலம் அறிவு புறக்கணிக்கப்படுறது இது முதன் முறை இல்லை. ஏற்கனவே பாடல் வெளியாகும் போது முதலில் தீ யினுடைய பெயர் போடப்பட்டு, அப்புறம் அறிவோட பெயர் போடப்பட்டதும். யூடியூபில்  அறிவின் பெயர் விடுபட்டதும் பிரச்னை கிளம்பியது.பிறகு, Rolling Stone என்ற இதழில் தமிழ் கலைஞர்கள் குறித்த கட்டுரையில எஞ்சாயி, எஞ்சாமி பாடலோட புகைப்படத்த முதல் பக்கத்தில் போட்டிருந்தனர்.ஆனால் அதுலயும் அறிவோட புகைப்படம் இடம் பெறவில்லை. இந்த சர்ச்சை எழுந்த நேரத்தில், இயக்குநர் பா.ரஞ்சித் அறிவுக்கு ஆதரவா குரல் கொடுத்தார். ஏன் அறிவை  ஓதுக்கிறீர்கள் என கூட கேட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.