எதிர்மறை கருத்து.? போர் அடிக்குதா.? 100 கோடி வசூலை தாண்டிய "வலிமை".. வேறலவலில் கொண்டாடும் ரசிகர்கள்

வலிமை திரைப்படத்திற்கு எதிர்மை கருத்துக்கள் வந்தாலும், அந்த படம் இரண்டே நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை அடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எதிர்மறை கருத்து.? போர் அடிக்குதா.? 100 கோடி வசூலை தாண்டிய "வலிமை".. வேறலவலில் கொண்டாடும் ரசிகர்கள்

போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் ஆக்க்ஷன் மற்றும் பாசம் கலந்து அசத்தலாக வெளியான படம் தான் "வலிமை".. இப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியானது.

ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை என சமூக ஊடங்களில் செய்திகள் வெளியானது.. மேலும் படத்தின் பிற்பகுதி மிகவும் மெதுவாக செல்வதாவும், போர் அடிப்பதாகவும் எதிர்மறை கருத்து வெளியானது. நீண்ட நேரம் சண்டை காட்சிகள் என படத்தை செல்வதாகவும்,  கிட்டத்தட்ட 3 மணி நேரம் படம் இருப்பதால் சலிப்பு ஏற்படுவதாக கூறப்பட்டது. ஆனால் வழக்கம் போல் அஜித் திரைக்கு வந்தாலே போதும் என அஜித் ரசிகர்கள் கூறி வரும் நிலையில் இப்படம் வணிக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், வலிமை திரைப்படம் இரண்டே நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 65 கோடியும், தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் 20.5 கோடியும், வெளிநாடுகளில் 20.60 கொடி வசூலையும் செய்திருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.