#Exclusive பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டே மாலைமுரசுக்கு அளித்த பிரத்யேக பேட்டி
நடிகை பூஜா ஹெக்டே மாலை முரசுக்கு அளித்த பிரத்யேக பேட்டி

தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் முகமூடி படத்தின் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தளபதி 65 படத்தில் நடிக்கிறார். கோலிவுட், டோலிவுட்தைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் கால் பதித்து பான்-இந்தியா ஸ்டாராக உயர்ந்திருக்கிறார் பூஜா ஹெக்டே.
பான் – இந்தியா நடிகையா வளர்ந்திருக்கீங்க, உயரத்தை தக்க வச்சிக்கணும்’னு பிரஷர் இருக்கா?
ஒவ்வொரு படமும் நடிச்சு முடிச்ச பிறகு அதுல இருந்து முழுசா வெளியே வந்துடுவேன். எந்த மொழி படமா இருந்தாலும் அதுல நான் என்ன புதுசா முயற்சி செஞ்சிருக்கோம்’ங்கிறது தான் எனக்க முக்கியம். அதே சமயம், படத்தோட ரிசல்ட் நம்ம கையில கிடையாது. ஆனா அந்த பிரஷர் நல்ல விஷயம்’னு தான் சொல்லுவேன். காரணம், அதுதான் நமக்குள்ள இருக்குற போட்டியாளரை உயிர்ப்போட வச்சுக்க உதவியா இருக்கு. பான்-இந்தியா நடிகையாகணும்’ங்கிற என்னோட கனவு நிஜமாகி இருக்கு. இன்னும் நிறைய படங்கள் பண்ணனும்.
உங்க மாசில்லா முக அழகோட ரகசியம் சொல்லுங்க?
சிரித்துக் கொண்டே, அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. இந்த உலகத்திலேயே பெரிய சோம்பேறி நானா தான் இருப்பேன். ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தவறாம செய்வேன். தினமும் மேக்-அப்போட தூங்கினா வழக்கத்தை விட 10 வருஷத்துக்கு முன்னாடியே முக அழகு குறைஞ்சிடும்’னு ஒரு கட்டுரை படிச்சேன்.
அதுல இருந்து, மொத்தமா மேப்-அப் கலைச்சிட்டு தான் நைட் தூங்கப் போவேன். அது மட்டும் இல்லாம, ஸ்கின் அலர்ஜி இருக்கு, சோ, அப்பப்போ முகம் கழுவிட்டே இருக்கேன். முடிஞ்சவரை மேக்-அப் போடுறதை கம்மி பண்ணிட்டேன். ஏர்போர்ட், ரெட் கார்பெட்’ன்னு எந்த இடத்துக்கு போறேனோ அதுக்கு தகுந்த மாதிரி டிரஸ், லுக் மெயின்டெயின் பண்ணுவேன். நீங்க படத்துல பார்க்குற மாதிரி நேர்ல இல்லையேன்னு சிலர் சொல்லுவாங்க, ஷூட்டிங் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் நான் என்னோட ஒரிஜினாலிட்டியோட இருக்கத் தான் ஆசைப்படுறேன்.
படங்களில் மேக்-அப் இல்லாம நடிக்குறது கஷ்டமாச்சே?
இந்தியில் ஹவுஸ்புல் படம் பண்ணப்போ, கிட்டத்தட்ட மேக்-அப் போடாம தான் நடிச்சேன். லைட்டிங் உள்பட மத்த விஷயத்தை எல்லாம் கேமராமேன் பார்த்துப்பாரு, அதனால நான் எப்படி இருக்கேனோ, அப்படியே ஸ்க்ரீன்’ல வர முடிஞ்சது. ஹேர் ஸ்டைலுக்கு பெருசா எதுவும் மெனக்கெட மாட்டேன். தேங்காய் எண்ணையை விட தலைமுடிக்கு எதுவும் அழகு தந்துடாது. விக்டோரியா சீக்ரெட் மாடல்ஸ் கூட விர்ஜின் கோக்கனட் ஆயில் தான் தூங்கி எழுந்ததும் யூஸ் பண்றாங்க, அது தான் நானும் பாலோ பண்றேன்.
அலா வைகுந்தபுரமுலோ படத்தில் வந்த அந்த கால் மேட்டர் சர்ச்சையை கிளப்புச்சே? என்னால அது மாதிரி சீன் நடிக்க முடியாதுன்னு நீங்க சொல்லியிருக்கலாமே?
அல்லு அர்ஜூன் என் கால் அழகு பார்த்து மயங்குற மாதிரி ஒரு சீன் இருந்தது, அதை வச்சு ஒரு பாட்டும் வரும். யானை மாதிரி ஆடி அசைஞ்சு நடக்குற பெண்’னு அர்த்தத்தோட அந்த பாட்டு அமைஞ்சிருக்கும். ஒரு பிரஸ் மீட்’ல அதைப் பத்தி கேட்டப்போ, ஒரு ஆண் என்னோட இடுப்பை பார்க்குறதை விட, காலை பார்க்குறது பரவாயில்லன்னு சொன்னேன், அதை வச்சு தெலுங்கு ரசிகர்கள் ரசனையை நான் தப்பா பேசிட்டதா திரிச்சு விட்டுட்டாங்க, வேற வழியில்லாம விளக்கம் கொடுத்தேன். அந்த படத்தில் கூட ஹீரோ என் கேரக்டரை பார்த்து தான் விரும்புறதா காட்டியிருப்பாங்க, அதனால டைரக்டரை நான் கன்வின்ஸ் பண்ண வழியில்லாம போச்சு.
நீங்க அடிப்படையில் ஒரு மாடல், ஆனா நடிப்பை எப்படி கத்துக்கிட்டீங்க?
ஷூட்டிங் ஸ்பாட்’ல தான் கத்துக்கிட்டேன். அதே சமயம், நடிப்புக்காக கூத்து பட்டறைக்கு கிளாஸ் போனவங்க’லாம் கொடுத்து வச்சவங்கன்னு தான் சொல்லணும். தமிழ்’ல முகமூடி படம் பண்ணப்போ, எனக்கு டெக்னிக்கல் வார்த்தைகள் எதுவுமே தெரியல. நான் என்னோட மார்க்’ல நின்னுட்டு இருந்தப்போ, போகஸ், போகஸ், பூஜா போகஸ்’ன்னு சொல்லிட்டே இருப்பாங்க, ஆனா
அதுக்கான டெக்னிக்கல் அர்த்தம் அப்போ தெரியல. அப்புறம் தான் எம்.ஓ.எஸ், 48 பிரேம்ஸ்’ன்னு நிறைய வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்’னு உதவி இயக்குனர்கள் கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன். ராதே ஷ்யாம் பட ஷூட்டிங்குக்காக வொர்க் ஷாப் செஞ்சிட்டு அப்புறம் தான் ஷூட்டிங் போனோம். அப்போ பிரபாஸ் நிறைய ஹெல்ப் பண்ணாரு.
கைவசம் என்னென்ன படங்கள் இருக்கு?
ராதே ஷ்யாம் ரிலீசுக்கு வெயிட்டிங்கில் இருக்கு. தமிழில் தளபதி 65, தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ராம்சரண் கூட ஆச்சார்யா, அகில் கூட மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர், இந்தியில் சல்மானுடன் கபி ஈத், கபி தீபாவளி, அப்புறம், ரன்வீர் சிங்குடன் ரோகித் ஷெட்டி இயக்கத்தில் சர்குஸ் படங்களில் நடிக்கிறேன். இன்னும் சில படங்கள் பேச்சுவார்த்தை நடக்குது.