
நடிகர் சூர்யா, இயக்குனர் பண்டியராஜ் இணையும் நான்காவது திரைப்படம் எதற்கும் துணிந்தவன். ஜெய் பீம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றி நடிகர் சூர்யாவிற்கு இந்திய அளவிலான நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்தது. இந்நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஒரு பாடலை பாடி உள்ள நிலையில் தற்போது அனிருத் ஒரு பாடலை பாடி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .
இப்பாடல் நடிகர் சூர்யாவின் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது . அனிருத் பாடியதாக சொல்லப்படும் பாடல் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு ஹைலைட்டான இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுறது.
நடிகர் சூர்யாவின் 40-வது திரைப்படமான இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் அவரது ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.