
பிரபல பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் கமல் கிஷோர் மிஸ்ரா. சர்மா ஜி கி லக் கயி, தேஹாட்டி டிச்கோ, காலி பாலி போன்ற பல படங்களை தயாரித்துள்ளார். இவர் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை அந்தேரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் கமல் கிஷோர் மிஸ்ரா. தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் உள்ள கார் பார்க்கிங்கில் இருந்து தனது காரை வெளியே எடுத்துள்ளார்.
அந்த நேரம் பார்த்து கமலின் மனைவி ஜாஸ்மின் அவரை தேடி அங்கு வந்துள்ளார். அப்போது கமல் காருக்குள் வேறொரு பெண்ணுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ஜாஸ்மின், அவரோடு கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கமல், காரை யாஸ்மின் மீது ஏற்றிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஜாஸ்மின், கணவர் கமல் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், கார் பார்க்கிங்கில் ஜான்மின் மீது கமல் கார் ஏற்றியதை சிசிடிவி மூலம் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து கமல் மிஸ்ராவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.