பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை..! கடிதம் சிக்கியதால் வெளிவந்த உண்மை..!

பிரபல நடிகை ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், கடிதம் சிக்கியதால் அவருடைய காதலனை போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை..! கடிதம் சிக்கியதால் வெளிவந்த உண்மை..!
Published on
Updated on
2 min read

சமீப காலமாகவே நடிகைகளின் தற்கொலை என்பது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது பிரபல பெங்காலி நடிகை ஒருவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பெங்காலி நடிகை மற்றும் மாடல் அழகியும் ஆனவர் பிதிசா டி மஜீம்தார். இவர் கொல்கத்தாவில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளாக தனியாகவே தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து பிதிசா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து தடயங்களுக்காக வீட்டை சோதனை செய்த போலீசாருக்கு, பிதிசா டி மஜூம்தார் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தை படித்த பிறகு அவரது ஆண் நண்பரின் மோசமான நடவடிக்கையால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தான் பிதிசா தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து பிதிசாவின் காதலன் அனுபாப் பேராவிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதனிடையே பிதிசாவை போன்றே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தெலுங்கு நடிகை பல்லவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதற்கு அவர் தனது மன வருத்தத்தை தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது மன வருந்திய பிதிசாவே தற்கொலை செய்து கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com