இதுல யாரு மாமனாரு? யாரு மருமகன்? ரஹ்மான் வெளியிட்ட புகைப்படத்தால் குழம்பிய ரசிகர்கள்

இதுல யாரு மாமனாரு? யாரு மருமகன்? ரஹ்மான் வெளியிட்ட புகைப்படத்தால் குழம்பிய ரசிகர்கள்

சினிமாவை பொறுத்தவரை நடிகர், நடிகைகள், தங்களின் உடலமைப்பினை கட்டுக்கோப்பாக வைத்துகொள்வதில் மிகுந்த கவனமுடன் இருப்பார்கள் 

உடற்பயிற்சி செய்தல் , டையட் என பல விஷயங்களை மேற்கொள்வார்கள். சில நடிகர்களுக்கு எவ்வளவு வயதானாலும் இளமையான தோற்றத்தில் இருந்து ஆச்சரியப்படுத்துவார்கள். உதாரணமாக நடிகர் விஜய், தனுஷ் என சொல்லிக்கொண்டே போகலாம்.

தற்போது அப்படி தான் ஒரு மூத்த நடிகர் ஒரே ஒரு புகைப்படம் மூலம் ரசிகர்களை குழப்பியுள்ளார். கோலிவுட்டில் நிலவே மலரே படம் மூலம் நடிகராக அறிமுகமான ரகுமான், தொடர்ந்து புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இறுதியாக தமிழில் துருவங்கள் பதினாறு படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் ரகுமான் அவரது சோசியல் மீடியா பக்கத்தில் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்திருந்தார். அதாவது இவரது மூத்த மகள் ருஷ்டாவிற்கும், அல்தாப் நவாப் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

அப்போது மணமக்களுடன் ரகுமான் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் டிரண்டாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதில் யார் மாமனார் யார் மாப்பிள்ளை என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஏனெனில் அந்த புகைப்படத்தில் ரகுமானை பார்க்க அவ்வளவு இளமையாக தோற்றம் அளிக்கிறார். இப்போது கூட இவரை திருமணம் செய்ய பலர் தயாராக இருப்பார்கள் என்பது போல நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.