சும்மாவா பின்ன.!! பூஜா ஹெக்டேவின் சொத்துமதிப்பை பார்த்து வாய்பிளந்த ரசிகர்கள் 

சும்மாவா பின்ன.!! பூஜா ஹெக்டேவின் சொத்துமதிப்பை பார்த்து வாய்பிளந்த ரசிகர்கள் 
Published on
Updated on
1 min read

பூஜா ஹெக்டே முதன்முதலில் திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்தது தமிழ் சினிமாவில் தான். 2012ல் மிஷ்கின் இயக்கிய முகமூடி திரைப்படத்தில் பூஜா ஹெக்டே  நடித்து திரைத்துறையில் அறிமுகமானார்.

ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு அடையாளத்தை ஏற்படுத்தி தரவில்லை. அதன் பின் இந்தியில் ஸ்டார் நடிகரான ரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக மொகஞ்சதாரோ திரைப்படத்தில் நடித்தார். பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட அந்த திரைப்படமும் தோல்வியை தழுவியது.

தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் வாய்ப்புகள் கொடுத்த தெலுங்கு சினிமாவுக்கு உண்மையாக உழைத்து நல்ல நடிப்பை வெளிப்படுத்தி அதிகம் சம்பளம் வாங்கும் ஹிட் நடிகை லிஸ்டில் இடம் பிடித்தார். 

நடிக்க துவங்கிய காலகட்டத்தில் பெரிதும் வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வந்த இவர், தற்போது விஜய், பிரபாஸ் என முன்னணி நட்சத்திரங்களுடன் பிசியாக நடித்து வருகிறார்.

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டேவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை பூஜா ஹெக்டேவின் சொத்து மதிப்பு  ரூ.51 கோடி தேறும் என்று சினிமா வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com