என்னது “அயலான்” பான் இந்தியா படம் இல்லையா...! பான் - வேர்ல்ட் திரைப்படமா..!

என்னது “அயலான்”  பான் இந்தியா படம் இல்லையா...! பான் - வேர்ல்ட் திரைப்படமா..!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் “அயலான்”. இந்தப்படத்தை ”இன்று நேற்று நாளை” படத்தின் இயக்குனர் ரவிக்குமார் தான் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கி வருகிறார். சயின்ஸ் பிக்சன் கதையாக உருவாகி வரும் இந்தப்படம் இந்தியாவில் தயாராகும் முதல் ஏலியன் படம் என்று கூறப்படுகிறது. 

அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்திசிங், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ”அயலான்” படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் இஷா கோபிகர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இப்படம் குறித்து கூறியுள்ளார். அதாவது, ’அயலான்’ திரைப்படம் இந்தியாவில் உருவாகும் முதல் ஏலியன், சயின்ஸ் ஃபிக்சன் மற்றும் கிராபிக்ஸ் திரைப்படம் என்றும், இந்த படம் வேற லெவலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இஷா கோபிகரின் இந்த பேட்டியை அடுத்து ’அயலான்’ திரைப்படம் ஒரு பான் இந்தியா திரைப்படம் அல்ல என்றும், பான் - வேர்ல்ட் திரைப்படம் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.