எங்கப்பா இது? ”வலிமை” திரையிடுவதில் காலதாமதம் ...தியேட்டரையே அடிச்சு நொறுக்கிய தல ரசிகர்கள்!!

எங்கப்பா இது? ”வலிமை” திரையிடுவதில் காலதாமதம் ...தியேட்டரையே அடிச்சு நொறுக்கிய தல ரசிகர்கள்!!

வலிமை படம் திரையிடுவதற்கு தாமதம் ஏற்பட்டதால் ரசிகர்கள் தியேட்டர்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இந்த படத்தின் ரீலிஸ் தேதி தள்ளி தள்ளி போனதால் அஜித்தின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர். இந்நிலையில்  ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்புக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது வலிமை திரைப்படம்.

இந்த படம் வெளியான எல்லா திரையரங்குகளிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அஜித்தின் ரசிகர்கள் அதிகாலை காட்சியை பார்ப்பதற்காக குடும்பம், குடும்பமாக திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வந்ததை பார்க்க முடிந்தது. 

அந்த வகையில் சேலத்தில்  வலிமை படத்தின் முதல் நாள் முதல் காட்சி  அதிகாலை 4:00மணிக்கு ஒளிபரப்பப்படும் என திரையரங்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள ஏ ஆர் ஆர் மல்டிபிளக்ஸ் தியேட்டர் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

நீண்டநாள் எதிர்பார்ப்பு தற்போது நினைவாகியுள்ள நிலையில், திரைப்படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், நான்கு மணிக்கு திரையிடுவதற்கு பதிலாக ஐந்து மணிக்கு திரையிடப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. தியேட்டரில் படத்தை திரையிடுவதற்கு காலதாமம் ஏற்பட்டதால், ஆவேசம் அடைந்த ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு இருந்த பொருட்களை சேதப்படுத்தும் முயற்ச்சியில் ஈடுபட்டனர்.

இதேபோன்று மீண்டும் இரண்டாவது காட்சி ஏழு முப்பது மணிக்கு திரையிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் எட்டு மணிக்கு தான் ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் தியேட்டர் முன்பு இருந்த கண்ணாடி மேற்கூரை போன்றவற்றை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு காவல்துறையினர் யாரும் முன்வராததால்  வேறுவழியின்றி தியேட்டர் நிர்வாகிகளே ரசிகர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.     

திரைப்படம் திரையிடப்படுவது உறுதியாகிவிட்ட நிலையில் சற்று நேரம் கூட பொறுக்காத ரசிகர்கள் இது போன்ற வன்முறையில் ஈடுபட்டது தியேட்டர் உரிமையாளர்களை பெரும் சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது.