பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக, தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக, தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை, இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக்கி வருகிறார். இந்த திரைப்படம் 2 பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக, தமது டுவிட்டர் பக்கத்தில் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது.

இந்த திரைப்படத்தில் பணிபுரிந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர்கள் கார்த்தி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வன் விரைவில் திரைக்கு வர உள்ளதாக பதிவிட்டுள்ளனர்.