7 வேடங்களில் விக்ரம் நடித்த ’கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.!!

விக்ரம் பல்வேறு வேடங்களில் நடித்த ’கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

7 வேடங்களில் விக்ரம் நடித்த ’கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.!!

விக்ரம் பல்வேறு வேடங்களில் நடித்த ’கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

‘இமைக்கா நொடிகள்’ படப்புகழ் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள திரைப்படம் கோப்ரா. ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் பிரமாண்டமாக தயாராகி வரும் இப்படத்தில், விக்ரம் 7 விதமான கெட்-அப்களில் நடித்துள்ளார்.

ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் படமாக்கப்பட்ட கோப்ரா படத்தின் படப்பிடிப்பு நீண்டகாலமாக நடைபெற்று வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு முடியாமல் காலதாமதமாகிக் கொண்டே வந்தது. இந்நிலையில், கோப்ரா படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து பட வெளியீட்டுக்கான பணிகளை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.