பீஸ்ட் டிரைலரால் வெறியான ரசிகர்கள்.. விஜய்யால் நஷ்டம் அடைந்த தியேட்டர் ஓனர்.. கம்பளைண்ட் கொடுக்கல?

சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளிவரும் பீஸ்ட் திரைப்பட காட்சியின் டிரைலர் நேற்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது.
பீஸ்ட் டிரைலரால் வெறியான ரசிகர்கள்.. விஜய்யால் நஷ்டம் அடைந்த தியேட்டர் ஓனர்.. கம்பளைண்ட் கொடுக்கல?
Published on
Updated on
1 min read

நெல்லையில் அமைந்துள்ள ராம் திரையரங்கில் பீஸ்ட் படத்தின் டிரைலர் ஒளிப்பரப்பட்டது. இதனை காண மாலை முதலே விஜய் ரசிகர்கள் தியேட்டர் வளாகத்தில் திரண்டனர். ஆட்டம் பாட்டம் உற்சாகத்துடன் ரசிகர்கள் பீஸ்ட் படத்தின் டிரைலரை பார்க்க ஆவலாக காத்திருந்தனர். 

இதனையடுத்து சரியாக மாலை 6 மணிக்கு பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியானது. இதனை காண அளவுக்கு அதிகமான ரசிகர்கள் ஒரே நேரத்தில் தியேட்டருக்குள் நுழைந்ததால், ரசிகர்களுக்கிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு, தகராறும் வெடித்தது. டிரைலர் வெளியானதும் தியேட்டரின் இருக்கைகள் மேல் நின்று ரசிகர்கள் அட்டகாசம் செய்ததால், இருக்கைகள் பல சேதமடைந்தன.

உடனே தியேட்டரில் இருந்த ஊழியர்கள் ஆடல் பாடலில் ஈடுபட்ட ரசிகர்களை வெளியேற்ற முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் தியேட்டரை ரணகளம் ஆக்கி விட்டனர். அளவுக்கு அதிமகான ரசிகர்கள் கூட்டம் தியேட்டரை விட்டு வெளியேற முயன்ற போது கண்ணாடி கதவு உள்ளிட்டவை சேதமடைந்தது. இதனால் திரையரங்கில் பரபரப்பான நிலை காணப்பட்டது. இருப்பினும் ரசிகர்களின் ஆதரவு திரையரங்கிற்கு தேவைப்படும் என்பதால் காவல்துறையில் திரையரங்கம் தரப்பில் புகார் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com