பண்ருட்டியில் மாபெரும் பலாப்பழ கண்காட்சி!

பண்ருட்டியில் மாபெரும் பலாப்பழ கண்காட்சி!

பண்ருட்டியில் மாபெரும் பலாப்பழ கண்காட்சி நடைபெற்றது. இதில் ஒரே இடத்தில் 150 வகையான பலாப்பழங்கள் ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் "150 வகை பலா, 150 விதமான சுவை" என்ற தலைப்பின் அடிப்படையில் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள பத்திரக்கோட்டையில் மாபெரும் பலா திருவிழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மட்டுமன்றி புதுச்சேரி மற்றும் கேரளாவில் மாநிலங்களில் இருந்து முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இந்த பலா திருவிழாவில் பண்ருட்டி மற்றும் கோவை, ராணிபேட்டை மற்றும் வெளிநாட்டு பலா என, நூற்றுக்கும் மேற்பட்ட பலா வகைகளை விவசாயிகள் பார்வைக்காக கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக பண்ருட்டி பலா, ஆயிரம் காய்ச்சி பலா, செந்தூரம் பலா, மிருது பலா, தேன் மஞ்சள் பலா, தாய்லாந்து ஆரஞ்ச் பலா, சிவப்பு பலா என பல்வேறு வகையான பலாப்பழங்கள் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தன. இதனை சென்னை, சேலம், கோவை, ஈரோடு, தேணி, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பல்வேறு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான பலா கண்காட்சியினை பார்வையிட்டு கண்டுகளித்தனர்.

மேலும் இதில், ஏராளமான பெண்கள், பலாப்பழத்தைக் கொண்டு சிப்ஸ், ஜூஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களைச் சமைத்து அசத்தினர். பலாப்பழத்தின் தேவை மற்றும் சுவையை மேலும் அதிகரிப்பதற்காக இந்த திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரே இடத்தில் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தில் தயாரிக்கப்பட்ட பலா உணவுப் பொருட்கள் கிடைத்ததால் மக்கள் ஆர்வமுடன் இதில் பங்கேற்று, உணவுப் பொருட்களை ருசித்து சாப்பிட்டனர். இதில் விவசாயிகள் தென்னை மர தோட்டத்தில் பலாவை ஊடுபயிராக செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!