" 'இந்திய சினிமாவின் தங்கப் பையன்' ராஜமௌலி " - நடிகர் சேகர் கபூர் புகழாரம்...!

நடிகர் சேகர் கபூர், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியைச் சந்தித்து, அவரை 'இந்திய சினிமாவின் தங்கப் பையன்' என்று அழைத்துள்ளார்.

" 'இந்திய சினிமாவின் தங்கப் பையன்' ராஜமௌலி " - நடிகர் சேகர் கபூர் புகழாரம்...!

நடிகர் சேகர் கபூர், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியைச் சந்தித்து, அவரை 'இந்திய சினிமாவின் தங்கப் பையன்' என்று அழைத்துள்ளார்.

எஸ்.எஸ்.ராஜமௌலி :

பாகுபலி : தி பிகினிங், பாகுபலி 2 : தி கன்குலூஷன் போன்ற பிரம்மாண்ட திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி. இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்று வந்தது. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் , ராம் சரண், அலியா பட் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோர் நடித்துள்ளனர். இதுவரை உலகம் முழுவதும் ரூ.1,500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. ஆர்ஆர்ஆர்  என்பது 1920 களின் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு கற்பனைக் கதையாகும். அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம்.என  இரண்டு உண்மையான ஹீரோக்கள் மற்றும் நன்கு அறியப்பட்ட புரட்சியாளர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.