எனக்கு ரூ.50 போதும்... அந்த மனசு தான் சார் கடவுள்.. மூதாட்டியின் வைரல் வீடியோ

எனக்கு ரூ.50 போதும்... அந்த மனசு தான் சார் கடவுள்.. மூதாட்டியின் வைரல் வீடியோ
Published on
Updated on
1 min read

மூதாட்டி ஒருவர், தோட்ட வேலைகளுக்காக சென்று 5 மணிநேரம் பணியாற்றி மிக குறைவான கூலியை பெற்று கொண்ட சம்பவம் அனைவரும் ஆச்சியத்தில் ஆழ்த்துள்ளது.

பணியாற்றும் நேரத்தில் தோட்டத்தில் இருந்த கீரைகளையும் பறித்து விற்பனை செய்ய வைத்துள்ளார். வேலைகள் முடிந்ததும் தோட்டத்தின் உரிமையாளர் மூதாட்டிக்கு ரூ.100 கூலிகொடுத்த நிலையில், தனக்கு ரூ.50 போதும் என்று மூதாட்டி கூறுகிறார். 

5 மணிநேரம் வேலை பார்த்தால் ரூ.300 கூலி வாங்குவார் வேலை செய்பவர்கள், ஆனால் அந்த மூதாட்டி ரூ.100 கூட வேண்டாம் என கூறியது அனைவரையும் ஆச்சியத்தில் ஆழ்த்துள்ளது.

மேலும் அந்த மூதாட்டி கீரையை விற்பனை செய்தால் ரூ.200 கிடைக்கும் என கூற, இதனை நீங்கள் நினைத்தால் ரூ.1000-க்கு விற்பனை செய்யலாம் என்று உரிமையாளர் கூறுகிறார்.

இதனைக்கேட்ட மூதாட்டியோ அவ்வுளவு பணம் வேண்டாம். எல்லாத்தையும் ஆண்டவன் பார்த்துக்கொள்வான். எனக்கானது கிடைத்தால் போதும், நீங்கள் ரூ.50 மட்டும் தாருங்கள் என்று கூறி பெற்று செல்கிறார். இந்த வீடியோ இணையத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com