தி லெஜெண்ட் படத்தின் இந்தி உரிமத்தைப் பெற்றார் நம்பி:

தி லெஜெண்ட் படத்தின் இந்தி உரிமத்தை நம்பி ராஜனின் கணேஷ் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் பெற்றது. அதன் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அப்போது எடுக்க்ப்பட்ட போட்டோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

தி லெஜெண்ட் படத்தின் இந்தி உரிமத்தைப் பெற்றார் நம்பி:

தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் என்ற பிரபல ஜவுளி சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வரும், தி லெஜெண்ட் சரவணன் அருள், தனது திரைப்பயணத்தை தி லெஜெண்ட் என்ற படம் மூலம், ஹீரோவாக, கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.

ஜேடி, ஜெர்ரி இருவரும் இயக்கி வரும் இந்த படத்தை, தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் மாசான பாடல்களை, ஹாரிஸ் ஜெயராஜ் இயக்கி, வைரமுத்து, மதன் கார்க்கி, பா.விஜய், கபிலன், சினேகன் போன்ற பிரபல பாடலாசிரியர்கள் பாடல் எழுதியிருக்கிறார்கள். மேலும், நடன இயக்குனர்களாக, ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் போன்றவர்களும், ஸ்டண்ட்சுக்கு அனல் அரசும் இணைந்து, பிரம்மாண்ட படக்குழு கொண்டு இந்த படத்தை உருவாக்கி வருகிறார் தி லெஜெண்ட் சரவண அருள்.

பிரபு, நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், விஜயகுமார், மறைந்த நடிகர் விவேக் போன்ற பலர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தின் தமிழ் ட்ரெயிலர் மே 29ம் தேதி வெளியாகிய நிலையில், தமிழ் பட ரசிகர்கள் பலரும் பல வகையான நல்ல கமெண்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

90ஸ் குழந்தைகளின் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஹாரிஸ் ஜெயராஜ், 2000ங்களின் தொடக்கத்தில் இருந்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். அப்போதைய முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்த ஹாரிஸ் ஜெயராஜ் சமீபத்தில் திரையுலகை எட்டிப் பார்க்காமலே இருந்தார். ஆனால், இந்த படம் மூலம் ஒரு ரீ எண்ட்ரி கொடுக்கும் இவரது இசைக்காக 90ஸ் கிட்ஸ் மிக ஆர்வமாகக் காத்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகத் தயாராகிக் கொண்டிருக்கும் இந்த தி லெஜெண்ட் படத்தின் தெலுங்கு ட்ரெயிலரை நடிகை தமன்னா வெளியிட்ட நிலையில், படத்தின் இந்தி உரிமத்தை நம்பி ராஜனின் கணேஷ் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் பெற்றது. அதன் ஒப்பந்தங்கள் கையெழுத்துப் போடும் போது எடுத்த போட்டோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு பலரது வாழ்த்துகளையும் பெற்று வருகிறது.

இந்த படம் வருகிற ஜூலை 28ம் தேதி உலகெங்கிலும் உள்ள தியேட்டர்களில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.