மகிழ்ச்சியின் உச்சத்தில் சிம்பு ரசிகர்கள்! நடந்தது என்ன?

நடிகர் சிம்பு தொடர்பான அப்டேட்கள் வெளிவந்துள்ளதை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

மகிழ்ச்சியின் உச்சத்தில் சிம்பு ரசிகர்கள்! நடந்தது என்ன?

நடிகர் சிம்பு தொடர்பான அப்டேட்கள் வெளிவந்துள்ளதை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு படம் மாநாடு. இந்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில் இப்படம் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டிவிட்டர் பக்கத்தில், புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி பற்றிய அறிவிப்பை வரும் புதன்கிழமை, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா வெளியிடுவார் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை U1Records நிறுவனம் கைப்பற்றி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  சுரேஷ் காமாட்சியின் மற்றொரு பதிவில், மாநாடு படத்தின் ஆடியோ தொடர்பான விபரங்களை கொரோனா சூழலில் பல இழப்புக்கள் நடக்கும் நேரத்தில் அறிவிப்பது சரியாக இருக்காது என கருதுவதாகவும் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

 

இதனிடையே பிரபல இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுடன் நடிகர் சிம்பு மூன்றாவது முறையாக இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த சிம்புவின் ரசிகர்கள் கொண்டாடி விட்டனர்.